கொக்குவில் இந்துக் கல்லூரியின் பிரதி அதிபர் கே. வேலாயுதம் அகவை அறுபது காணபதையிட்டுப் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார். கொக்குவில் இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற விஞ்ஞான தின விழாவின் போது கல்லூரி அதிபர் அ.அகிலதாஸ் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். பிரதி அதிபர் கே. வேலாயுதம் புகழ் பூத்த கணித ஆசான் என்பதும் கல்லூரியின் விஞ்ஞான மன்றத்தின் பொறுப்பாசிரியராகச் செயற்பட்டு சாரதி என்ற இதழை வெளிக்கொணரத் தொடங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்தில் பிரபலமான மணி கல்வி நிலையம் ஊடாகவும் இவர் கல்விச் சமூகத்தால் நன்கு அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அகவை அறுபது காணவுள்ள கொக்குவில் இந்துக் கல்லூரிப் பிரதி அதிபர் கே. வேலாயுதம்(மணி வேலாயுதம்)
by Arjun Rajeswaran | Oct 27, 2011 | NEWS | 0 comments