பங்குஜனின் இரட்டைச் சதம் கைகொடுக்க மானிப்பாய் இந்துக் கல்லூரியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ஓட்டங்களால் வெற்றி கொண்டது கொக்குவில் இந்துக் கல்லூரி.

அகில இலங்கைப் பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கம் நடத்தும் 19 வயதுப் பிரிவு அணிகளுக்கிடையிலான பிரிவு (III) க்கான முதலாம் சுற்றுப்போட்டி திங்கள், செவ்வாய்கிழமைகளில் கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த ஆட்டத்தில் மானிப்பாய் இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து கொக்குவில் இந்துக் கல்லூரி அணி மோதிக் கொண்டது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கொக்குவில் இந்துக் கல்லூரி அணித் தலைவர் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார். இதற்கமைய தனது முதலாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய கொக்குவில் இந்துக் கல்லூரி அணி 75 ஓவர்கள் நிறைவில் எட்டு விக்கெட்டுக்களை இழந்து 363 ஓட்டங்களைப் பெற்றது.
இதில் 
பங்குஜன் ஆட்டமிழக்காமல் 18 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 200 ஓட்டங்களையும், சந்தியன் 61 ஓட்டங்களையும், யனுதாஸ் 37 ஓட்டங்களையும், ராகுலன் 27 ஓட்டங்களையும் தமது அணி சார்பாகப் பெற்றனர்.
பந்து வீச்சில் மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி சார்பாக 
நிரேஷன் 16 ஓவர்கள் பந்து வீசி 56 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், ரிஷிகரன் 22 ஓவர்கள் பந்து வீசி 83 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் , நிக்சன் 11 ஓவர்கள் பந்து வீசி 66 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும், சேந்தன் 10 ஓவர்கள் பந்து வீசி 54 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும், பிரதீபன் 5 ஓவர்கள் பந்து வீசி 34 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும், பானுஷன் 2 ஓவர்கள் பந்து வீசி 10 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தனது முதலாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி 31.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 116 ஓட்டங்களைப் பெற்றது.
இதில் பிரதீபன் 27 ஓட்டங்களையும், பானுஷன் 24 ஓட்டங்களையும், ரிஷிகரன் 14 ஓட்டங்களையும் தமது அணி சார்பாகப் பெற்றனர்.
பந்து வீச்சில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணிசார்பாக 
பார்த்தீபன் 7 ஓவர்கள் பந்து வீசி 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், பங்குஜன் 8 ஓவர்கள் பந்து வீசி 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், ராகுலன் 6 ஓவர்கள் பந்து வீசி 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், ஆதித்தன் 3.5 ஓவர்கள் பந்து வீசி 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், பவித்திரன் 5 ஓவர்கள் பந்து வீசி 23 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
கொக்குவில் இந்துக் கல்லூரி அணித் தலைவர் மானிப்பாய் இந்துக் கல்லூரியை தொடர்ந்து துடுப்பெடுத்தாட அழைத்தார். இதற்கமைய தனது 2வது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி 32.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 106 ஓட்டங்களை மட்டும் பெற்றது.
இதில் நிக்ஷன் 31 ஓட்டங்களையும், கிரிசாந் 23 ஓட்டங்களையும், பானுஷன் 18 ஓட்டங்களையும், சபேசன் 13 ஓட்டங்களையும் தமது அணி சார்பாகப் பெற்றனர்.
பந்து வீச்சில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணிசார்பாக 
பங்குஜன் 9.4 ஓவர்கள் பந்து வீசி 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், ராகுலன் 8 ஓவர்கள் பந்து வீசி 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், பவித்திரன் 6 ஓவர்கள் பந்து வீசி 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், ஆதித்தன் 5 ஓவர்கள் பந்து வீசி 7 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
கொக்குவில் இந்துக் கல்லூரி அணிஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ஓட்டங்களால் வெற்றி பெற்றது

இந்துக்களின்கூடைப் பந்தாட்டப் போட்டி!

கிரிக்கட் இந்துக்களின் போரிற்கு முன் இடம்பெறும் கூடைப்பந்தாட்ட இந்துக்களின் போர் இதுவாகும்.இந்துக் கல்லூரி 19 வயதுப் பிரிவு கூடைப்பந்தாட்ட அணி பங்கு கொள்ளும் கூடைப்பந்தாட்ட போட்டி ஓன்று கொக்குவில் இந்துக் கல்லூரியில் எதிர் வரும் வாரமளவில்இடம்பெறவுள்ளது.மிகச் சிறந்த முறையில் பயிற்சி பெற்று வரும் இந்துக் கல்லூரி அணி இவ் வருடத்தில் எதிர்கொள்ளும் முதல் போட்டி இதுவாகும்.கொக்குவில் இந்துக் கல்லூரி கூடைப்பந்தாட்ட திடலில் இப் போட்டி இடம்பெறவுள்ளது.சொந்த ஆடுகளத்தில் விளையாடும் கொக்குவில் இந்துவை யாழ் இந்து எதிர் கொள்ளவுள்ளது.இரு அணிகளும் பலம் மிக்கவை என்பதால் போட்டிகள் மிகப் விறுவிறுப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது