இந்துக்களின் போர் என வர்ணிக்கப்படும் யாழ் இந்துக் கல்லூரிக்கும் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கட் போட்டிகள் நடைபெறும் இடம் , ஏற்பாடுகள் மற்றும் திகதிகள் பற்றி விபரம் இரு கல்லூரிகளின் உயர்மட்ட குழுவின் கூட்டத்தின் இறுதியில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன் படி டெஸ்ட் போட்டியானது மார்ச் மாதம் 2 ம், 3 ம் திகதிகளில்(வெள்ளிக்கிழமை,சனிக்கிழமை) கொக்குவில் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
மட்டுப்படுத்தப் பட்ட 50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் போட்டி 6 ம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
பழைய மாணவர்கள் கலந்து கொள்ளும் போட்டியானது 7 ம் திகதி புதன்கிழமை கொக்குவில் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
தவிர வடக்கு தெற்கு உறவுப் பாலமான பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியுடனான போட்டிகள் குறித்து விரைவில் தீர்மானிக்கப்படவுள்ளது.இதன் பின் இம்முறை முதல் தடவையாக யாழ் இந்துக் கல்லூரி , கொக்குவில் இந்துக் கல்லூரி , பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி என்பன பங்குபற்றும் 20-20 முக்கோணத் தொடரும் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. அப் போட்டிகளின் திகதி, போட்டி நடைபெறும் மைதானங்கள் தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படவுள்ளது.
THANKS
jhcboys