JPL கிண்ணம் யார் வசம்?
எதிர்வரும் 23.06.2012 மதியம் 1.30க்கு இடம்பெறவுள்ள இறுதிப்போட்டியில்
சென்றலைஸ் விளையாட்டுக் கழகத்துடன் முதலாவது ஜே.பி.எல் கிண்ணத்திற்காக கொக்குவில் மத்திய சன சமூக நிலைய அணி மோதவுள்ளது

இறுதிப்போட்டியில் மோதவுள்ள சென்றலைட்ஸ் விளையாட்டுக்கழக அணியும் கொக்குவில் மத்திய சன சமூக நிலைய அணியும் மோதுகின்றன. இரண்டும் பிரிவு Bனை சேர்ந்த அணிகள். எற்கனவே இவை ஒரு போட்டியில் ஒன்றையொன்று எதிர்கொண்டிருக்கின்றன. இப் போட்டியில் சென்றலைட்ஸ் விளையாட்டுக்கழக அணி வெற்றி பெற்றிருக்கின்றது. என்ன தான் இருந்தாலும் அதிஸ்ரம் கொக்குவில் மத்திய சன சமூக நிலைய அணிப்பக்கம் வீசுகின்றது. எதிர்பார்ப்போம் பரபரப்பான இறுதிப்போட்டிகளை

இடம்பெற்று வருகின்ற ஜே.பி.எல் போட்டித்தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் கொக்குவில் மத்திய சன சமூக நிலையத்திடம் அரையிறுதிப் போட்டியினை இழந்தது ஜொலிஸ்ரார் வி.க.  நாணயச் சுழற்சியில் வென்ற ஜொலிஸ்ரார் வி.க முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தனர்.இதன்படி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஜொலிஸ்ரார் வி.க. கொக்குவில் மத்திய சன சமூக நிலைய அணியின் பந்து வீச்சினை எதிர்கொள்ள முடியாது தடுமாறினர். இறுதியில் 20 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 9இலக்குகளை இழந்த நிலையில் 82 ஒட்டங்களை பெற்றுக் கொண்டனர். துடுப்பாட்டத்தில் ஜொலிஸ்ரார் வி.க சார்பாக உமாதரன் 22 ஓட்டங்களையும், ஜனார்த்தனன்,கார்த்திக் தலா 14 ஒட்டங்களையும் அணிக்காக பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் கொக்குவில் மத்திய சன சமூக நிலைய அணியின் சார்பாக சாம்பவன் 4 பரிமாற்றங்களினை வீசி 9 ஒட்டங்களுக்கு 3 இலக்குகளினையும், ஜனுதாஸ் 4 பரிமாற்றங்களினை வீசி 5 ஒட்டங்களுக்கு 2 இலக்குகளினையும், சிலோஜன் 4 பரிமாற்றங்களினை வீசி 16 ஒட்டங்களுக்கு 2 இலக்குகளினையும் கைப்பற்றினர். 83 ஓட்டங்களினை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பாடிய கொக்குவில் மத்திய சன சமூக நிலைய அணியினர் 11.3 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 1இலக்கினை மத்திரம் இழந்த நிலையில் 83 ஒட்டங்களை பெற்றுக் வெற்றியினை பெற்றுக் கொண்டனர். துடுப்பாட்டத்தில் கொக்குவில் மத்திய சன சமூக நிலைய அணியின் சார்பாக ஜெயருபன் 54ஒட்டங்களையும், பங்குஜன் 14 ஒட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் ஜொலிஸ்ரார் வி.க சர்பாக சஞ்சித் 4 பரிமாற்றங்களினை வீசி 11 ஒட்டங்களுக்கு 1 இலக்கினை கைப்பற்றினார். போட்டியின் சிறப்பாட்டக்காரனாக 4 பரிமாற்றங்களினை வீசி 9 ஒட்டங்களுக்கு 3 இலக்குகளினை கைப்பற்றிய கொக்குவில் மத்திய சன சமூக நிலைய அணியின் சாம்பவன் தெரிவானார். எதிர்வரும் 23.06.2012 மதியம் 1.30க்கு இடம்பெறவுள்ள இறுதிப்போட்டியில் சென்றலைட்ஸ் விளையாட்டுக் கழகத்துடன் முதலாவது ஜே.பி.எல் கிண்ணத்திற்காக கொக்குவில் மத்திய சன சமூக நிலைய அணி மோதவுள்ளது.

facebook நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் (Share This on facebook)

Special Thanks to

உஷாந்தனின் பதிவுகள் .: 

 http://ushantgana.blogspot.com