மாயா ஜால கலைஞன் கொக்குவில் கோபாலன்

டென்மார்க் கலைஞர்கள் பேராயத்தின் பாராட்டும் விருதும் பெற்றார்..
டென்மார்க்கில் வாழும் தமிழர்களின் தொகை 11.000 மட்டுமே, இதற்குள் தன்னை பதினோராயிரத்தில் ஒருவராக அடையாளம் காட்டி தனித்துவமாக மிளிர்கிறார் கலைஞர் கொக்குவில் கோபாலன்.
நாடுவிட்டு நாடு புலம் பெயர்ந்தாலும் தனது ஊரான கொக்குவிலை அவர் மறவாது தன் பெயருடன் இணைத்து தாயகத்திற்கும் சிறப்பு கொடுத்துள்ளார்.
பொதுவாக புலம் பெயர் தமிழர் வாழும் நாடுகளில் நடனம், நாடகம், இசைக்குழு போன்றன அதிகமாகக் காணப்படுவது வழமை, அவற்றுடன் ஒப்பிட்டால் மாயா ஜாலவித்தை என்பது மிகவும் குறைவாகவே இருக்கும்.
அந்தவகையில் ஒல்போ நகரில் வானொலி சேவை உட்பட பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கலைஞர் கொக்குவில் கோபாலன் மாயா ஜால வித்தையை தனது கலைப்பணியாக முன்னெடுத்துள்ளார்.
டென்மார்க்கில் மாயா ஜாலவித்தையை செய்பவர் பலர் உண்டு அவர்களில் ஒரேயொரு தமிழராக இவர் வலம் வருகிறார்.
அன்னார் கடந்த 25 வருடங்களாக ஆற்றிவரும் பல்வேறுபட்ட கலை முயற்சிகளுக்காக டென்மார்க் மண்ணில் அவர் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
கலைஞர் கௌரவிப்பு விழாவில் அவர் நடாத்திய மாயா ஜால வித்தை சிறப்பு நிகழ்வாக நடைபெற்றது, அத்தருணம் புகைப்படக் கலைஞர் செந்தூரன் பிடித்த புகைப்படங்கள் கீழே தரப்படுகின்றன.
நன்றி அலைகள்