கொக்குவில் இந்துகல்லூரி ஆசிரியை திருமதி. காயத்ரி பாலமுரளீதரன் (09/10/2012) பிற்பகல் இறைவனடி சேர்ந்தார். இவர் இறுதிவரை உயர்தர கலைப் பிரிவு மாணவர்களுக்கான வரலாறு மற்றும் புவியியல் பாடங்களுக்கான போதனசிரியராக அளப்பரிய சேவையறிக் கொண்டிருந்தார்.
இவர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்பதோடு இவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அவர்கள் துன்பத்தில் நாமும் பங்கெடுத்து கொள்கின்றோம். |
இவரது இழப்பு எமது மாணவச் செல்வங்களுக்கும் கல்லுரிச்சமுகத்திற்கும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். எமது பெருமதிப்புக்குரிய ஆசிரியருக்கு மாணவர்கள், பழைய மாணவர்கள், சக ஆசிரியர்கள் மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரி சமூகம் மற்றும் கொக்குவில் இணையம் ekokuvil.com சார்பாக எமது கண்ணீர் அஞ்சலிகள்!!
|