கொக்குவில் இல் உள்ள பல ஆலயங்களில் மட்டும் இன்றி பாடசாலைகளிலும்  நவராத்திரி தின வழிபாடுகள் கும்பம் வைத்தல்,விசேட பூசை ,நவதானியம் விதைத்தல்  போன்ற நிகழ்வுகள் இடம் பெற்றன அம்மன் ஆலயங்கள் மட்டும் இன்றி மஞ்சவனபதி ,மணியர்பதி, பொற்பதி  பிள்ளையார் உட்பட பல ஆலயங்களிலும் சிறப்பாக அனுஷ்டிக்க படுகின்றது குறிப்பிடத்தக்கது குறிப்பாக கலட்டி பகுதியில் உள்ள இரு வைரவர் ஆலயத்திலும் இன்றைய தினம் பொங்கல் செய்யப்பட்டு வீதியால் சென்ற மக்கள் உட்பட பலருக்கு பகிர்ந்தளிக்க பட்டது அது போல் கொக்குவில்லில் உள்ள டான் தொலைகாட்சி கலையகத்திலும் சிறப்பாக அமைக்க பட்ட பந்தலில் நவராத்திரி நிகழ்வுகள் இடம்பெற்றது இதில் சொற்பொழிவு வும் இடம் பெற்றது

நவராத்திரி விழா 
==============

சிவகதி வேண்டி சிவராத்திரி விரதம்
செல்வச் சிறப்போடு வாழ நவராத்திரி விரதம்

அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாளும் அவற்றுள் முக்கியமான இந்த ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும்

மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாதான். இந்த சரத்காலத்தில் வரும் நவராத்திரியை சாரதா நவராத்திரி சிறப்பாக கொண்டாடுவார்கள்.

தசம் என்றால் பத்து அத்துடன் ஒரு இரவைச் சேர்த்து (தசரா) பத்துநாள் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள்.
நவராத்திரி வழிபாடு பெண்களுக்கே உரியது என்றாலும் ஆண்களும் இவ்வழிபாடு மிக சிறந்தது எல்லா வயதுடைய பருவத்தைச் சார்ந்த ஆண்கள் , பெண்கள் நவராத்திரி வழிபாட்டில் ஈடுபடலாம்.

நவராத்திரி வழிபாட்டால் பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சியின் பயன். கன்னிகள் பெறுவது திருமணப் பயன். சுமங்கலிகள் பெறுவது மாங்கலயப் பயன். மூத்த சுமங்கலிகள் பெறுவது மனமகிழ்ச்சி மன நிறைவு எல்லோரும் பெறுவது பரிபூரண திருப்தி.
விரத நாட்கள்

முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு. 16.10.2012
இடை மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு. 19.10.2012
இடை மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு. 22.10.2012

துர்க்கை: 1. மகேசுவரி, 2. கெளமாரி , 3. வராகி. இலட்சுமி: 4. மாகலெட்சுமி 5. வைஷ்ணவி 6. இந்திராணி. சரஸ்வதி : 7. சரஸ்வதி 8. நாரசிம்மி , 9. சாமுண்டி.

மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை பெருக்கி முடிவாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. ஒன்பது படிகள் அமைப்பது மரபு.ஒவ்வொரு படியிலும் ஐதீகப்படி பொம்மைகளை வைக்க வேண்டும்.

1வது படி – ஓரறிவு உயிரினம் (மரம், செடி, கொடி, மர பொம்மைகள்)

2வது படி – இரண்டறிவு உயிரினம் (நத்தை, சங்கு, ஆமை பொம்மைகள்)

3வது படி – மூன்றறிவு உயிரினம் (எறும்பு, கரையான் பொம்மைகள்)

4வது படி – நான்கறிவு உயிரினம் (நண்டு, வண்டு, பறவை பொம்மைகள்)

5வது படி – ஐந்தறிவு உயிரினம் (ஆடு, மாடு, சிங்கம், புலி, நாய் பொம்மைகள்)

6வது படி – ஆறறிவு உயிரினம் (மனித பொம்மைகள்)

7வது படி – மனிதனுக்கு அப்பாற்பட்ட மகரிஷிகள், முனிவர்கள்.

8வது படி – தேவர்கள், நவக்கிரகங்கள், பஞ்சபூத தெய்வங்கள்.

9வது படி – பிரம்மா, விஷ்ணு, சிவன், அம்மன், விநாயகக் கடவுளர்.

இம்முறைப்படி கொலு வைத்து, முப்பெரும் தேவியரை வணங்கி வரும் போது கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றும் நம்மிடம் செழித்தோங்கும்.
நவராத்திரியில் ஸ்ரீதேவியைத்(திருமகளைத்) துதித்து வழிபடுவோர்களுக்கு தேவியானவள் சகல சௌபாக்கியங்களையும் நல்குவாள் என்பது மட்டுமல்லாமல் வீட்டுப்பேறாகிய முக்தியையும் நல்குவாள் என்று காரணாகமம் கூறுவதாகச் சொல்லப்படுகின்றது.

நவராத்திரி வழிபாட்டு முறை.
=======================

1. முதலாம் நாள்:- சக்தித்தாயை முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர். இவள் மிகவும் கோபக்காரி. நீதியைக்காக்கவே இவள் கோபமாக உள்ளாள்.முதல்நாள் நெய்வேத்தியம் :-சர்க்கரைப் பொங்கல்.

2. இரண்டாம் நாள்:- இரண்டாம் நாளில் அன்னையை வராஹி தேவியாக கருதி வழிபட வேண்டும். வராஹ(பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள் ஆகும். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தனது தெத்து பற்களால் பூமியை தூக்கியிருப்பவள். இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள். இரண்டாம் நாள் நெய்வேத்தியம் :- தயிர்ச்சாதம்.

3. மூன்றாம் நாள்:- மூன்றாம் நாளில் சக்தித்தாயை இந்திராணியாக வழிபடவேண்டும். இவளை மாஹேந்தரி, சாம்ராஜ தாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை அழித்தவள். தேவலோகத்தை பரிபாலனம் செயபவளும் இவளேயாகும். பெரிய பெரிய பதவிகளை அடையவிரும்புபவர்களிற்கு இவளின் அருட்பார்வை வேண்டும்.மூன்றாம் நாள் நெய்வேத்தியம்:- வெண்பொங்கல்.

4. நான்காம் நாள்:- சக்தித்தாயை அன்று வைஷ்ணவி தேவியாக வழிபடவேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பவள். தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின் வாகனம் கருடன். நான்காம் நாள் நெய்வேத்தியம்:- எலுமிச்சை சாதம்.

5. ஐந்தாம் நாள்:- ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவியாக வழிபட வேண்டும். அன்னை மகேஸ்வரனின் சக்தியாவாள். திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள். அளக்கமுடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.ஐந்தாம் நாள் நெய்வேத்தியம்:- புளியோதரை.

6. ஆறாம் நாள்:- அன்று அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும். மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்கிடுபவள். வீரத்தை தருபவள்.ஆறாம் நாள் நெய்வேத்தியம்:- தேங்காய்ச்சாதம்.

7. ஏழாம் நாள்:- ஏழாம்நாள் அன்னையை மகாலட்சுமியாக வழிபடவேண்டும். கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். வீ~;ணு பத்தினியாவாள். பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தருபவள் அன்னையாகும்.ஏழாம் நாள் நெய்வேத்தியம்:- கல்க்கண்டுச் சாதம்.

8. எட்டாம் நாள்:- அன்று அன்னையை நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும். மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள்வேண்டும்.எட்டாம் நாள் நெய்வேத்தியம்:- சர்க்கரைப் பொங்கல்.

9. ஒன்பதாம் நாள்:- அன்று அன்னையை ப்ராஹ்மி ஆக வழிபடவேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள். ஞானசொரூபமானவள். கல்விச்செல்வம் பெற அன்னையின் அருள் அவசியமாகும். ஒன்பதாம் நாள் நெய்வேத்தியம்:- அக்கர வடசல், சுண்டல்