கொக்குவில் இல் பல்வேறு இடங்களில் வீதி திருத்த வேலைகள் இடம்பெற்று வந்தாலும் தொடர்ந்து பெய்யும் கடும் மழையால் வேலைகள் இன்னும் நிறைவு செய்ய படாமல் மக்களும் அந்த வீதிகளை பாவிக்கும் மக்களும் பலத்த இடைஞ்சலுக்கு உள்ளாகின்றனர்
அந்த வகையில் கே கே ஸ் வீதி புனரமைப்பு வேலைகள் கொக்குவில் சந்தியில் வீதியின் பாதி காப்பட் இடப்பட்டு பாதி திருத்த படாது உள்ளது அது போல் ஆடியபாதம் வீதி மருத்துவ பீடம் தொடக்கம் கொக்குவில் நூலகம் வரையான முந்நூறு மீட்டர் தூரம் கல் இடப்பட்டு வீதி யின் உயரம் கூட்டபட்டு இருந்தாலும் மழை காரணமாக அந்த வீதியில் செல்வது என்பது மிகவும் சிரமானது அது போல் கொக்குவில் சந்தி தொடக்கம் அம்பட்ட பாலம் வரை கற்கள் பறிக்க பட்டும் வீதி யின் ஒரு பகுதி திருத்த வேலைகளுக்காக வெட்டபட்டும் இருப்பதால் பலரும் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர்
அது போல் பல்வேறு பாலங்களும் திருத்த வேலைக்கு உட்படுவதால் நீர் வடிந்து ஓடுவதிலும் பல்வேறு சிக்கல்களை மக்கள் அன்றாடம் சந்திக்கின்றனர்