கொக்குவில் இந்துக்கல்லூரி கலைப்பிரிவு 1995 மாணவன் இராசலிங்கம் காந்தலிங்கம்(ஆசிரியர் ஞானபண்டித வித்தியாலயம், கொக்குவில், முன்னாள் ஆசிரியர் நெடுந்தீவு மகாவித்தியாலயம்,இலங்கை சபரகமுவ பல்கலைக்கழக 98/99 மாணவன்) 20.12.2012 அன்று இறைவனடி சேர்ந்தார்.

இவர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்பதோடு இவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு கண்ணீர்பூக்களை காணிக்கையாக்குகின்றோம். 
 
கொக்குவில் இந்து கல்லூரி 1995ம் ஆண்டு வர்த்தகப் பிரிவு மாணவன் அமரர் இராசலிங்கம் காந்தலிங்கம் (காந்தன்)அவர்களின் திடீர் மரணச்செய்தி அறிந்து தவிக்கும் சக மாணவர்களாகிய நாம் அன்னாரின் திடீர் மரணத்தால் மீளாத்துயரில் பரிதவிக்கும் அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

கா.பொ த ( உ/த) 1995 மாணவர்கள்
கொக்குவில் இந்து கல்லூரி
கொக்குவில்.

இலங்கை சபரகமுவ பல்கலைக்கழக 98/99 பிரிவு சமூகவிஞ்ஞானங்களும் மொழிகள் பீட மாணவன் அமரர் இராசலிங்கம் காந்தலிங்கம் (காந்தன்) அவர்களின் திடீர் மரணச்செய்தி அறிந்து அன்னாரின் இழப்பால் துயருறும் குடுப்தாரின் மீளாத்துயரில் நாமும் பங்குகொள்வதுடன் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் கண்ணீர்ப்பூக்களையும் காணிக்கையாக்குகிறோம்.

98/99 பிரிவு சமூகவிஞ்ஞானங்களும் மொழிகள் பீட மாணவர்கள்
இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகம்
பெலிகுலோயா.