புதிதாக அமைக்கப்பட்ட கரப்பந்தாட்ட மைதானம் திறப்பு


கொக்குவில் கிழக்கு ஞான வைரவர் ஆலய தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் புதிதாக நிர்மாணக்கப்பட்ட கரப்பந்தாட்ட மைதானம் நேற்று சனிக்கிழமை உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

ஹரிசோபன் தலைமையில் நேற்று சனிக்கிழமை இரவு  நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் த.ஈ;ஸ்வரராசாவினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் அ.ரவீந்திரதாஸ், இளைஞர் சேவைகள் மன்ற அலுவலர் எ.யுவராஜ், கிராம அலுவலர் வ.சுந்தரலிங்கம் உட்பட மற்றும் பலர் கலந்துகொண்டார்கள்.