ற்பொழுது புதுக்கோவில் புனருத்தாரணம்
செய்யப்பட்டு வருகின்றமை பக்தர்கள் அறிந்ததே.
எதிர்வரும் வருடம் ஆலய வருடாந்த மக்ஷோசபம்
நடாத்துவதற்கு ஏதுவாக புனருத்தாரண வேலைகள்
நடைபெற்று வருகின்றன. இப் புனருத்தாரண
வேலைகளுக்கு தேவையான நிதிகள் யாவும் கோவில் நிருவாகத்தினரால்
சேகரிக்கபட்டு கொண்டிருக்கின்றது.
இதற்காக அன்பளிப்பு செய்யவிரும்பும் பக்த
அடியார்கள் கோவில்
நிருவாகத்தினருடன்
தொடர்புகொண்டு உறுதிப்படுத்திய பின்னர்
உங்களது உதவிகளை வழங்கி எம்பெருமானின் அருள் ஆசியைப் பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கின
்றோம். வங்கி மூலம் பணம் அனுப்புபவர்கள் எமது கோவில்
நடைமுறைக் கணக்கு இலக்கம் 0001090676
இலங்கை வங்கி யாழ்ப்பாணக்
கிளைக்கு அனுப்பி வைக்கலாம். இத் தளத்தினை பார்வையிட்டு உதவிகளை வழங்கும்
பக்தர்கள் தயவு செய்து நிர்வாகத்தினருடன்
தொடர்பு கொள்ளுங்கள் அல்லது இத் தளத்தின்
மூலம் தெரியப்படுத்தி உறுதிப்படுத்திக்
கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். நீங்கள் செய்கின்ற உதவிகள் எமது கலை கலாச்சாரம்
பண்பாட்டு விழுமியங்கள்
பாரம்பரியங்களை எமது எதிர்கால சந்ததியினர்க்கு
கொண்டு சேர்ப்பதற்கும் இந்து சமயத்தின்
வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் பேருதவி புரியும் என்ற
உயரிய எண்ணத்தோடு உங்களையும் இந்த பணியில் இனைந்து கொள்ளுமாறு அன்போடு
கேட்டுக்கொள்கின்றோம். நன்றி
நிர்வாக சபையினர்
தொடர்புகளுக்கு
பொருளாளர்
திரு. அருள்நேசன் – 0094776154249
0094213214021 பி.ப 8.00 – மு.ப 5.30 (இலங்கை நேரம்)