IMG_5841யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக்கல்லூரியின் பரிசளிப்பு விழா கடந்த 06ஆம்திகதி வெள்ளிக்கிழமை காலை 09 மணிக்கு கல்லூரியின் பங்சலிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.
கல்லூரி அதிபர் வே.ஞானகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வுக்குப் பிரதம விருந்தினராக இலங்கை மத்திய வங்கியின் மீளாய்வு நிலைய உதவிப் பணிப்பாளர் கந்தையா பாலசுப்பிரணியம் கலந்து கொண்டார்.(Read More>>)
கடந்தாண்டு இடம்பெற்ற க.பொ.த சாதாரணதரத்தில் 09A பெற்ற ஐந்து மாணவர்களும் சிறப்பான பெறுகளைப் பெற்ற ஏனைய மாணவர்களும் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினால் தேசிய மட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்கள் பதக்கங்கள் அணிவித்துக் கௌரவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கடந்தாண்டு க.பொ.த உயர்தரத்தில் தோற்றிச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து கல்லூரியின் பழைய மாணவர் சங்க லண்டன் கிளை சார்பாக பல்கலை அனுமதி பெற்ற மாணவர்களுக்கான புலமைப் பரிசில் வழங்கும் வைபவம் இடம்பெற்றது. சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக் கழகத்துக்குத் தெரிவான மாணவர்களுக்குப் பல்வேறு ஞாபகார்த்தப் பரிசில்களும் வழங்கப்பட்டன.
இவர்களுக்கான பரிசில்களை பிரதம விருந்தினர் மற்றும் அவரது பாரியார் திருமதி.சாந்தாதேவி பாலசுப்பிரமணியம் ஆகியோர் வழங்கி வைத்தனர்.இறுதியாக நன்றியுரையினைப் பேராசிரியர் க.தேவராஜா நிகழ்த்தினார்.
இப் பாடசாலையில் கடந்த 2012இல் தமிழ்மொழி மூலம் தோற்றிய மாணவர்களில் 84 வீதமும் ஆங்கில மொழி மூலம் தோற்றிய மாணவர்களில் 100 வீதமும் க.பொ.த உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உயர் தரத்தைப் பொறுத்த வரையில் 2013இல் வர்த்தகத் துறையில் 12மாணவர்கள் 3A பெற்றுள்ளமை வரலாற்றில் பெற்ற பெரும் வெற்றி என்பதுடன் இது வடமாகாணத்திலேயே ஒரு சிறந்த பெறு பேறாகவுள்ளமை விசேட சிறப்பம்சமாகும்.
IMG_5832
IMG_5833
IMG_5834
IMG_5841
IMG_5860
IMG_5880
IMG_5881
IMG_5888
IMG_5894
IMG_5896