கொக்குவில் நாமகள் வித்தியாலய பொங்கல் விழாவும் கால்கோள்விழாவும்-
cvcvcvcvcயாழ். கொக்குவில் நாமகள் வித்தியாலயத்தில் பொங்கல் விழாவும், தரம் ஒன்று புதிய மாணவர்களுக்கான கால்கோள்விழாவும் அதிபர் திரு. சிவநாதன் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 17/1/2014 காலை 9.30அளவில் நடைபெற்ற இந்த வைபவத்தில் பிரதம விருந்தினராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக நல்லூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு. அருணாசலம் அகிலதாஸ் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் என பெருமளவிலானவர்கள் கலந்துகொண்டிருந்தனர். இந்த வைபவத்தின்போது தரம் ஒன்றுக்கான புதிய மாணவர்கள் வைபவ ரீதியாக வரவேற்கப்பட்டனர். அத்துடன் சிறுபிள்ளைகளின் கலைநிகழ்வுகளும், பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.