இஞ்ச இந்த கதைய கொஞ்சம் கேளுங்கோ இப்பிடியும் நடக்குதாம் பாருங்கோ 

மாவீரர் தினத்தன்று விளக்கேற்றிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்துள்ள படையினர் அவர்களுடன் சேர்ந்து விளக்கேற்றியஏனைய 8 பேருடன் ஒரு வாரத்திற்குள் தம்மிடம் சரணடைய வேண்டும் என காலக்கெடு விதித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தவிர்ந்த ஏனைய 8 இளைஞர்கள் தலைமறைவாகியிருக்கின்றனர். 
யாழ்.குடாநாட்டில் பலத்த கெடுபிடிகளுக்கு மத்தியில் யாழ்.கொக்குவில் பகுதியில் உள்ள பொற்பதி
வீதியின் முடிவில் உள்ள கிராமத்தில் கூடிய இளைஞர்கள் சிலர் மாவீரர் தினத்தன்று தீபங்களை ஏற்ற முற்பட்டதை ரோந்துவந்த படையினர் கண்டுள்ளனர்.யாழ்.கொக்குவில் பொற்பதி வீதியில் 
அவர்கள் உள்ளே வருவதற்கு முன்னதாகவே இளைஞர்கள் தீபத்தை அணைத்து விட்டு விளக்கை மறைத்து விட்டனர். இதனையடுத்து படையினர்
அங்கிருந்து விலகிச் சென்ற நிலையில், இளைஞர்கள் மீண்டும் தீபத்தை ஏற்றியிருக்கின்றனர். ஆனால் படையினர் அங்கிருந்து விலகிப் போவது
போன்று போய்விட்டு மீண்டும் வந்து அதே பகுதியில் பதுங்கியிருந்தனர்.
இந்நிலையில் தீபம் ஏற்றப்பட்டதும் அந்தப் பகுதியை படையினர் சுற்றிவளைக்க படையினரைக் கண்ட இளைஞர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
எனியும் 3 இளைஞர்கள் படையினரிடம் அகப்பட்டனர். குறித்த இளைஞர்களின் பெற்றோரிடம் சென்ற படையினர் பிள்ளைகளை தாம் கொண்டு
செல்வதாக கூறியதுடன், இந்த விடயம் வெளியே தெரியவந்தால் அதன் விளைவுகளுக்கு தாம் பொறுப்பல்ல எனவும் கூறிச் சென்றனர். இதனால்
பெற்றோர் அமைதியாக இருந்துவிட்டனர்.
இந்நிலையில் படையினர் கொண்டு சென்ற 3 இளைஞர்களையும் நேற்று வீடுகளுக்கு செல்ல அனுமதித்த படையினர், அவர்கள் மூவரும்
தம்முடன் சேர்ந்து விளக்கேற்றிய மற்றைய 8 இளைஞர்களையும் அழைத்துக் கொண்டு ஒரு வாரத்திற்குள் மீள சரணடைய வேண்டும் என
படையினர் தமக்கு பணித்திருப்பதாக தமக்கு நெருங்கிய வட்டத்தினரிடம் கூறியிருக்கின்றனர். ஆனால் அவர்களுடன் சேர்ந்து
விளக்கேற்றிய மற்றைய இளைஞர்கள் 8 பேரும் தற்போது தலலைமறைவாகியிருக்கும் நிலையில் குறித்த 3 இளைஞர்களும் செய்வதறியாத நிலையில் நிற்கின்றனர்.
NEWS FROM: http://www.ctr24.com/