45cfe4eb-b956-472a-b720-a1974e7333ab_S_secvpf

யாழ்.கொக்குவில் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற இருவரை திங்கட்கிழமை (23) இரவு யாழ். பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கொழும்பிலிருந்து வருகை தந்த இலங்கை மின்சார சபையின் புலனாய்வு அதிகாரிகளுடன் பொலிஸார் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என யாழ். பொலிஸார் இன்று (24) தெரிவித்தனர்.
குறித்த இருவரையும் பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதாகவும் இவர்களுக்கு எதிராக யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.