முருகப்பெருமான் இனிதமர்ந்துறையும் அருட்தலங்கள் பலவற்றுள் கொக்குவிற் பதியில் சிறப்புற்றோங்கி மிளிரும் மஞ்சவனப்பதி ஆலயமும் ஒன்றாகும் “மஞ்சலியாடு” “மஞ்சமலியகாடு” “மஞ்சமருதிகாடு” எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்த இக்கோயில் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகளால் “மஞ்சவனப்பதி” என்ற சிறப்புத் திருநாமம் இடப்பட்டு அது நிலைத்து நின்று இன்று அருளும் ஆன்மீகமும் பொழியும் ஆலயமாக வளர்ந்துள்ளது தொன்மை வாய்ந்த இத்தெய்வீக திருத்தலத்தில் முருகப்பெருமான் வள்ளி தேவசேனா சமேதராக எழுந்தருளி அருள் புரிகின்றார்.