கொக்குவில் இந்துக் கல்லுரியின் வர்த்தக நிலையமாகவும் வாகனதரிப்பிடமாகவும் கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்
ஆலையம் பயன்படுத்தப்படுதல்

வீடியோ 
உங்கள் கருத்துக்கள் 
இந்த வீடியோ ஆலயத்தால் வெளியிட பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது 
உங்கள் கருத்துக்கள் ???
ஆலையங்கள் அமைந்துள்ள பகுதியானது புனித பிரதேசமாக இலங்கை அரசினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தும் யாழ்ப்பாணத்தின் பிரபல பாடசாலையான கொக்குவில் இந்துக் கல்லுரியில் 14.02.2014ம் திகதி நடைபெற்ற விளையாட்டுப் போட்டிக்கான வர்த்தக நிலையமாகாவும், வாகனத்தரிப்பிடமாகவும் ஆலையத்திற்கே உரித்தான ஆலைய வீதியினை பக்தர்கள் ஆலையத்தின் உட்சென்று வழிபட முடியாதவகையில் ஆலையத்தின் புனிதத்தன்மைக்கு களங்கம் ஏற்படும் வகையிலும் செயற்பட்டுள்ளமை தொடர்பாக பதிவுகள் இவை.


கற்பித்தல் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் ஆலையத்தின் கட்டடத்தினுள் மோட்டார் சைக்கிளினை நிறுத்துவதனையும் ஆலைய நிர்வாகத்தினர் அவரினைஅப்புறப்படுத்துவதனையும் காணலாம்.

இதனுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புபட்டவர்களுக்கு நிச்சம் கர்வவினைகள் தொடரும் என்பதில் ஐயம் இல்லை. இவர்களது சந்ததியும் இதனை அனுபவிக்கும். இறைவனை மிஞ்சிய சக்தி எதுவும் இல்லை என்பதனை புரிந்து கொள்ளாத படித்த சமுதாயம் இது.

மேலும் இது தொடர்பாக இந்து சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் அவர்களுக்கும், வட மாகாண கௌரவ ஆளுநர் அவர்களுக்கும், வட மாகாண கௌரவ முதலமைச்சர் அவர்களுக்கும் மற்றும் வட மாகாண கௌரவ கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கும் கொண்டுவரப்படவுள்ளது