thanks knc
கொக்குவில் பகுதியில் மிகவும் பிரபலமடைந்த இடங்களில் குளப்பிட்டி சந்தை பகுதி மிகவும் முக்கியமானது ஆகும். இங்கு கொக்குவில் பகுதி மக்கள் மட்டுமன்றி அயல் பிரதேச மக்களும் வருகைதந்து தேவையான பொருட்களை கொள்வனவு செய்யும்  சந்தை ஆகும்.

அப்படி இருக்கையில் அங்கு சுகாதார சீர்கேடு இடம்பெருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.  குளப்பிட்டி மீன் சந்தையில் பழுதடைந்த மீன்கள் விற்கபடுவதாகவும். அசுத்தமான கற்களில் வைத்து மீன்கள் வெட்டபட்டு விற்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக பிரதேசபையினர் ஏன் கவனத்தில் கொள்ளவில்லை என்பது தெரியவரவில்லை. ஆகவே உரியவர்கள் கவனத்தில் எடுத்து இதற்கான தீர்வினை பெற்றுத்தரும்படி கேட்டுக்கொள்கின்றோம்.