யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியின் கிழக்குப் புறமாக உள்ள சுமார் 1 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பெறுமதியுடைய வீட்டையும் காணியையும் திருமதி தேசராசா இந்திராணி என்ற அம்மையார் கல்லூரிக்கு அன்புளிப்பு செய்துள்ளார். தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப நலன் என சொத்துக்களை சேர்த்து இலாபம் தேடும் பலருக்கு மத்தியில் இவ்வாறு சமூக நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுபவர்கள் மேலான நிலையில் மதிக்கப்பட வேண்டியவர்கள்.