உள்ளூராட்சி நிறுவனங்களின் கட்டமைப்பு மற்றும் சபைக் கூட்டங்கள் தொடர்பிலான சட்ட விதிகள் பற்றிய செயலமர்வு ஒன்றை இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம்
யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ளது.   யாழ். மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்களுக்கு இந்தச் செயலமர்வு நடத்தப்படவுள்ளது.

நாளை செவ்வாய்க்கிழமை காலை 8.30  மணிக்கு கொக்குவில் இந்துக்  கல்லூரியின் சுப்பரமணியம் மண்டபத்தில் இந்தச் செயலமர்வு இடம் பெறவுள்ளது.   சம்மேளனத்தின் தேசிய இணைப்பாளர் ஹேமந்தி குணசேகர இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். இதில் இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் கட்டமைப்பு, ஆட்சி முறைமைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றச் சட்டங்கள், தலைவர், உறுப்பினர்களின் கடமைகள், நல்லாட்சி முறையின் பண்புகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் சபை நடவடிக்கைகள் போன்றவை தொடர்பாக இந்தச் செயலமர்வில் விளக்கமளிக்கப்படவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.