கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையின் புதிய அதிபராக பேரம்பலம் தனபாலசிங்கம் பதிவியேற்றுள்ளார். 

கொக்குவில் கிருபாகர கந்தசுவாமி ஆலயத்தின் வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் பாடசாலையின் அதிபர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபர் என்.ஞனகாந்தன், நல்லூர் கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.மாணிக்காராஜா,  பாடசாலையின் நலன் விரும்பி இராகவன், ஆகியோர் கலந்துகொண்டனர். பாடசாலையின் அதிபராக இருந்த திருமதி சகாதேவன் கடந்த 9 ஆம் மாதம் ஓய்வுபெற்றுச் சென்றதை அடுத்து கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையின் புதிய அதிபராக பேரம்பலம் தனபாலசிங்கம்  பதிவியேற்றுள்ளார். பேரம்பலம் தனபாலசிங்கம் அதிபர் தரம் பரீட்சை மூன்றில் சித்தியடைந்து அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நியமனப் பத்திரத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.