kokuvil hindu college 2015 A/L results as follows. totally 13 3A’s results included.
க.பொ.த (உயர்தரம்) – 2015 மாவட்டத்தின் முதலாம், இரண்டாம்,மூன்றாம் இடங்கள் கொக்குவில் இந்து வசம்!!
க.பொ.த (உயர்தரம்) – 2015 பரீட்சையில் வணிக பிரிவு மாணவன் ம.லஜீவன் யாழ் மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் , கணிதப்பிரிவில் ச.தனுசன் யாழ் மாவட்டத்தில் இரண்டாம் இடத்தையும் ,க.சதூர்சன் யாழ் மாவட்டத்தில் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
இவர்களுக்கு எமது வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும்.
13 மாணவர்கள் 3A எடுத்து சாதனை!
க.பொ.த (உயர்தரம்) – 2015 பரீட்சையில் முடிபுகள் இன்றுவெளியிடப்பட்டுள்ள நிலையில் ,13 மாணவர்கள் 3A சித்திகளைப்பெற்று கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
வர்த்தகப்பிரிவில் -08 மாணவர்களும் ,கணிதப்பிரிவில் -04 மாணவர்களும் ,கலைப்பிரிவில் -01 மாணவரும் 3 A சித்திகளைப் பெற்றனர்.
க.பொ.த (உயர்தரம்) – 2015 பரீட்சையில் திறம்பட சித்தி அடைந்த அனைத்து மாணவ செல்வங்களுக்கும் எமது பாராட்டுக்களும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு இச்சாதனையாளர்களை உருவாக்கிய ஆசிரிய பெருந்தகைகளுக்கும் எமது பாராட்டுக்களை தெரிவிப்பதில் பேருவகை அடைகின்றது கொக்குவில் இந்துக் கல்லூரி சமூகம்.