கடந்த ஒரு கிழமையாக கொக்குவில் பகுதியில் டெங்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக கொக்குவில் வளர்மதி முன்னேற்றக்கழகம் தனது முன்பள்ளி மற்றும் ஏனைய வகுப்புக்களை இடைநிறுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமையில் இருந்து அங்கு வகுப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மீண்டும் வரும் திங்கட்கிழமையில் இருந்து வகுப்புக்களை நடத்த தீர்மாணிக்கப்பட்டுள்ளது. இது பிள்ளைகளின் நலனுக்காக எடுக்கப்பட்ட ஒரு முடிவாகும். அதுமட்டுமன்றி வளர்மதி முன்னேற்றக்கழகம் பலவழிகளில் டெங்கு ஒழிப்புக்காக உதவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
THANKS –KNC
THANKS –KNC