கொக்குவில் பகுதியில் அனைத்து வீடுகளின் முன்னும் குப்பைகள் இந்த நிலை வர  காரணம் நல்லூர் பிரதேச சபை
மூன்று தினங்களுக்கு முன் ஒலிபெருக்கி மூலம் குப்பைகளை வீட்டு வாசலில் போடும்படியும் அதனை மறுதினம் வரும் குப்பை சேகரிக்கும் வாகனங்கள் கொண்டு செல்லும் என்றும் அறிவிக்க பட்டது அதை தொடர்ந்து மறுநாள் கொக்குவில் இல் உள்ள அனைத்து வீதிகளில்லும் வீடுகளுக்கு முன் குப்பைகள் பழைய இரும்பு பொருட்கள் மரங்கள் என பல்வேறு பொருட்கள் இடப்பட்டது இடப்பட்டு மூன்று நாட்கள் ஆகியும் அவை அகற்ற படாமையால் மக்கள் பலத்த இடைஞ்சலுக்கு ஆளாகி உள்ளனர் இது தொடர்பாக எமது செய்தி சேவை பிரதேச சபையை தொடர்பு கொண்டபோது விரைவில் அகற்றப்படும் எனவும் குறிப்பிட்ட வாகனங்களை கொண்டு இவ்வளவு அதிகமான குப்பைகளை அகற்ற முடியவில்லை எனவும் குறிப்பிட்டனர்