7/1 நந்தாவில் ஒழுங்கை கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகக் கொண்ட ஜெயக்குமார் கீர்த்திகன் 06/10/2012 சனிக்கிழமை அன்று காலமானார்
.
 அன்னார், ஜெயக்குமார் பாக்கியலட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும்,  காலஞ்சென்ற கதிரமலை சிவக்கொழுந்து தம்பதியர்(அளவெட்டி) மற்றும் காலஞ்சென்ற சின்னத்தம்பி சின்னத்தங்கச்சி தம்பதியரின்(ஏழாலை) அன்புப் பேரனும்,  ஆர்த்தன்(யாழ் இந்துக்கல்லூரி), ஆரபி(யாழ் வேம்படி உயர்தரப் பாடசாலை) மற்றும் அபிசன்(யாழ் இந்து ஆரம்ப பாடசாலை) ஆகியோரின் சகோதரனும் ஆவார்.  அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-10-2012 திங்கட்கிழமை நண்பகல் அவரது இல்லத்தில் நடைபெறும்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

கீர்த்திகனை இழந்து வாடும் குடும்பத்துக்கு  எமது EKOKUVIL.COM இன் ஆழ்ந்த  அனுதாபங்கள் 

கொக்குவில் இந்துவின் மைந்தனும். சிறந்த துடுப்பாட்ட வீரரும் ஆகிய ஜெயக்குமார் கீர்த்திகன் டெங்கு காய்ச்சலினால் மரணம் அடைந்தார்.  அவர் கொக்குவில் இந்துவின் கிரிக்கட் வீரா் மட்டுமின்றி கூடைப்பந்து வீரரும் ஆவார். இவருக்கு 17 வயதே ஆகும்.                               இவர் யாழ். போதனா  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணம் அடைந்தார். அவரது சகோதரா்களுக்கும் டெங்குத் தொற்று எற்படடுள்ளதுடன். அயல் வீடுகளிலும் டெங்கு பரவிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவரின் இழப்பு பலரையும் பாதித்துள்ளது.