வடமாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரனால்  ஒரு மில்லியன் ரூபாய் செலவில் வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் கொக்குவில் மேற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினருக்கு  கர்ப்பூரம் உற்பத்தி செய்யும் நிலையம்
வராகி அம்மன் ஆலயம் அருகில்

திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தில் உள்ளவர்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும்நோக்குடன் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா, மாகாணசபை உறுப்பினர்கள் பா.கஜதீபன்,அ.பரஞ்சோதி,யாழ்.மாவட்ட உதவி அரசாங்க அதிபர் றூபினி வரதலிங்கம், நல்லூர் பிரதேச செயலர் பா.செந்தில்நாதன், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆர். வரதீஸ்வரன்,கிராம அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.