யாழ் மாவட்டத்தில் உள்ள கிரிக்கெட் விளையாட்டுக் கழகங்களுக்கு இடையே முதல் தடவையாக இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியொன்று “யாழ்ப்பாணம் பிரிமியர் லீக்” என்ற பெயரில் நடைபெறவுள்ளது.

யாழ் மாவட்டத்தில் உள்ள கிரிக்கெட்ட கழகங்களுக்கு இடையெ நடைபெற்ற புள்ளி விபரங்களின் அடிப்படையில் இந்தப் போட்டிக்கு இம்முறை முதல் எட்டு இடங்களைப் பெற்ற கழகங்கள் தெரிவு செய்யப்பட்டு போட்டி நடைபெற ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. கிரிக்கெட் கழகங்களை தரப்படுத்துவதில போட்டிகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் சென்ரல் விளையாட்டுக் கழகம் புள்ளிகளை வெளியிட்டு வரும் அடிப்படையில் இந்தக் கழகங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. யாழ் மாவட்ட கிரிக்கெட் கழகங்களுக்கு இடையே முதல் எட்டு இடங்களைப் பெற்ற கழகங்களான

  • ஜொனியன்ஸ் விளையாட்டுக் கழகம்,
  • ஜொலிஸ்ரார் விளையாட்டுக் கழகம், 
  • கொக்குவில் சி.சி.சி. விளையாட்டுக் கழகம்(KCCC)
  •  பற்றீசியன்ஸ் விளையாட்டுக் கழகம், 
  • சென்ரலைட்ஸ் விளையாட்டுக் கழகம்,
  •  சென்ரல் விளையாட்டுக் கழகம், 
  • மானிப்பாய் பரிஸ் விளையாட்டுக் கழகம்,
  •  தெல்லிப்பளை கிறாஸ் கொப்பேர்ஸ் விளையாட்டுக் கழகம் 

ஆகியன இந்தப் போட்டியில் விளையாடத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.