இந்துக்களின் போர் என வர்ணிக்கப்படும் யாழ். இந்துக் கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரி இடையேயான 50 பந்துப்

பரிமாற்றங்களைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரி ஏழு இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

 நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ். இந்துக்கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்ததன்படி துடுப்பெடுத்தாடி 46 பந்துப்பரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 228 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
229 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொக்குவில் இந்துக் கல்லூரி அணி 42 பந்துப்பரிமாற்றத்தில் மூன்று இலக்குகளை இழந்து 229 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.  இதனால் கொக்குவில் இந்து மூன்று இலக்குகளால் யாழ். இந்தக் கல்லூரியை வெற்றி கொண்டது.
கொக்குவில் இந்துவின் சார்பில் அணித்தலைவர் பங்குஜன் ஆட்டமிழக்காது 103 ஓட்டங்களைப் பெற்றார்.  யாழ். இந்துவின் சார்பில் ஜஸ்மினன் அதி கூடிய ஓட்டங்களாக 84 ஓட்டங்களைப் பெற்றார்.