கொக்குவில் ஐக்கிய விளையாட்டுகழகம் 22.01.2012 இன்றைய தினம் நாடாத்திய மாபெரும் இரத்த தான நிகழ்வு

கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலயத்தில் இடம் பெற்றது இந்த நிகழ்வில் நல்லூர் பிரதேசசபைச் செயலர் மற்றும் நாமகள் வித்தியாலய அதிபர் முன்னை நாள் கொக்குவில் இராமகிருஸ்ண வித்தியாலய அதிபர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இராணுவ அதிகாரிகள் இளைஞர்கள் யுவதிகள் ஆர்வமுடன் பங்குபற்றியுள்ளனர். கொக்குவில் ஐக்கிய விளையாட்டுகழகம் ஒவ்வொரு வருடமும் இரத்ததான முகாமை சிறப்பாக நடத்தி வருவதாகவும் தொடர்ந்து சமூகப்பணிகளை முன்னெடுத்து செயலாற்றவிருப்பதாக அதன் செயலாளர் எமக்கு தெரிவித்திருக்கின்றார்.
தங்களது முயற்சிக்கு பெரிதும் உதவிய பொதுமக்கள் நலன் விரும்பிகள் அரச உத்தியோகஸ்தர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதகா கூறியுள்ளார்