சந்தைக் கட்டடத் தொகுதியினைச் சுற்றி கழிவுநீர் தேங்கி நிற்பதால் பெரும் சிரமத்தின் மத்தியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதாக கொக்குவில், குளப்பிட்டி மீன் சந்தை வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.

அதிகளவான வியாபரிகளையும், நுகர்வோரையும் ஈர்க்கும் இடமாகக் காணப்படும் இந்தக் கொக்குவில் குளப்பிட்டிச் சந்தையின் கட்டடத் தொகுதியானது மரக்கறி மற்றும் மீன் வியாபார நடவடிக்கைகளுக்காக இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு்ள்ளன.
சந்தையின் மரக்கறி வியாபாரக் கட்டடத் தொகுதியினைத் தினமும் மாலை நேரங்களில் நல்லூர் பிரதேசசபையினர் சுத்தம் செய்வதனால், தாம் எந்தவித சிரமங்களுமின்றி சுத்தமான சூழலி்ல் வியாபாரம் செய்வதாக மரக்கறி வியாபாரிகள் கூறினர்.
இதேவேளை, இந்த சந்தையில் தாம் பெரும் கஷ்டத்தின் மத்தியில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மீன் வியாபாரிகள் தெரிவித்தனர். தாம் மீன் வியாபாரம் செய்யும் இந்தக் கட்டடத் தொகுதியானது தமது வியாபார நடவடிக்கைகளுக்கு போதுமானதாக இல்லை எனக் குறிப்பிட்ட அவர்கள், தமது இடத்தினை பிரதேச சபையினர் கழுவி சுத்தம் செய்கின்றபோதும் கழிவு நீர் வழிந்தோடுவதற்கான வசதிகள் காணப்படாமையினால்,  கட்டடத்தைச் சுற்றி கழிவு நீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதாகவும், தொற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாகவும் கூறினர்.

Flash News:-
கொக்குவில் குளப்பிட்டி சந்தைக்கென இரண்டு மாடிகளைக் கொண்ட புதிய கட்டம் ஒன்றும் நிர்மானிக்கப்படவுள்ளது.   இதற்கான ஆரம்ப கட்ட வேலைகளுக்கு 22 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கட்டட நிர்மாண பணிகள் இவ்வருட இறுதிக்குள் பூர்த்தி செய்யப்பட்டு புதிய சந்தை மக்களது பாவனைக்காக திறந்து விடப்படும்